தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
222
#image_title

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச்.,20) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே போல் நாளையும்(மார்ச்.,21) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், மார்ச் 24 முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்ஸியஸை நெருக்கி, வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகம் இருக்கக்கூடும். இதனால் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.