russia: திடீரென ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது ஒரேஷ்னிக் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆகியவை மூன்றாம் உலக போரை நோக்கி செல்கிறது . இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக இருக்கிறது.
இந்நிலையில் இது உலகபோராக வெடிக்கும் என்று அச்சப்படும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் ராணுவ அதிகாரிகளிடம் ஒரேஷ்னிக் ரக ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு மேலும் பதற்றத்தை எற்பபடுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இதுவரை இல்லாத அளவுக்கு உலகப் போருக்கு முன்னோடியாக மாறி வருகிறது. இந்நிலையில் மேற்கு நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
மேலும் தற்போதைய ரஷ்ய அதிபர் புதின் ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் ரஷ்யாவின் முக்கிய ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது பயன்படுத்தியது. மேலும் தற்போது அதிநவீன ஏவுகணையான ஹைப்பர் சோனிக் ஒரேஷ்னிக் ஏவுகணையை ஏவ திட்டமிட்டு வருகிறது.
மேலும் அந்த மீட்டிங் ல் இந்த ஒரேஷ்னிக் ஏவுகணையின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணை இதுவரை வேறு எந்த நாடுகளிலும் இல்லை. ஆனால் வருங்காலத்தில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது அதனால் இதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார்.