எலான் மஸ்கையே திரும்பிப் பார்க்க வைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்! இனி சிம்மே இல்லாமல் ஃபோன் பேசலாம்! பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அசத்தல் செய்தி!

0
164
BSNL made Elon Musk look back! You can talk on the phone without a SIM! Crazy news released by BSNL!
BSNL made Elon Musk look back! You can talk on the phone without a SIM! Crazy news released by BSNL!

எலான் மஸ்க் தன் புதிய கண்டுபிடிப்புகளால் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். ஆனால் ஒரு நிறுவனம் எலான் மஸ்கையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதுதான் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்”.

எலான் மஸ்க் இந்தியாவிற்கு “ஸ்டார்லிங்க் சாட்டிலைட்” சேவையைக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மூலைக்கும் நெட்வொர்க் இணைப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது “டைரக்ட் டு டிவைஸ்” என்ற புதிய சாட்டிலைட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது எலான் மஸ்கையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனமானது கலிஃபோர்னியாவில் உள்ள தகவல்
தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான “வியாசாட்”-டுடன் இணைந்து இந்தியாவில் முதல் “டைரக்ட் டு டிவைஸ்” செயற்கைக்கோள் இணைப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெகு தொலைவில் உள்ள பயனாளர்களுக்கும் தடையில்லா சேவையை வழங்கும் வழி வகுக்கும்.

இந்த சேவையைக் கொண்டு இந்தியாவில் எந்த இடத்திற்குச் சென்றாலும் அதன் பயனைப் பெற முடியும். இந்தப் புதிய இணைப்பானது தொலைதூரத்தில் வசிக்கும் பயனர்கள் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும் மக்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் வைஃபை கவரேஜ் குறைவாக உள்ள பகுதிகளில்கூட எமர்ஜென்சி கால்ஸ், எஸ்ஓஎஸ் மெசேஜஸ் அனுப்புதல் மற்றும் யுபிஐ பேமெண்ட்களையும் கூட பயன்படுத்தலாம் என்று பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.

இதற்கான சோதனைகள் கடந்த அக்டோபர் 2024 அன்று தொடங்கப்பட்டது. பிஎஸ்என்எல்-இன் இந்த சேவையானது இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் நிலையில், இதன் கட்டணம் குறித்த தகவல்களை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 1 மாத காலம் மட்டுமே இருக்கும் நிலையில், கூடிய விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி எலான்மஸ்க்கையே வியப்படையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபங்கு சந்தையில் பெரும் வீரராகும் எல்ஐசி: கோடி முதலீட்டின் அதிரடி கணக்கு!
Next articleகெளம்புங்க ராகுல் இனி நான் பாத்துக்குறேன்!! கம்பேக் கொடுக்க காத்திருக்கும் கில்!!