பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரூபாய் 91 க்கு இரண்டு மாதம் அதாவது 60 நாட்கள் வேலிடிடியை வழங்கியுள்ளது.
இந்த திட்டமானது ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் விட குறைந்த விலையில் சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் பொருத்தவரையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் சிக்னலுக்காக டவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
91 ரூபாய் திட்டத்தின் பயன்கள் :-
✓ இதில் 60 நாட்களுக்கான அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
✓ குறிப்பாக, பயனர்கள் நிமிடத்திற்கு @15pல் குரல் அழைப்புகளைப் பெறுகிறார்கள்.
✓ மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க் உட்பட ஹோம் எல்எஸ்ஏ மற்றும் தேசிய ரோமிங்கில் டேட்டா @1p/MB + SMS @25p/sms பயன்படுத்தப்படுகிறது.
✓ குறைந்த செலவில் உங்கள் சிம் நீண்ட நேரம் செயலில் இருக்க வேண்டுமெனில், இந்த பிஎஸ்என்எல் திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
✓ இந்த திட்டத்தில் டாக் டைம் வவுச்சரை எடுத்துக்கொண்டு அழைப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், வினாடிக்கு 1.5 பைசா வீதம் பணம் செலவழிக்க வேண்டும்.
இதனைத் தவிர வேறு சேவைகளை பெற வேண்டும் என்றால் அதற்கென தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.