Breaking News, National, News

பட்ஜெட் 2025: வரி அடுக்குகளை மாற்றுவதன் மூலம் சந்திக்கும் புதிய வாய்ப்புகள்!!

Photo of author

By Gayathri

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 8வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டிற்கு மக்கள் பல்வேறு வருமானப் பிரிவுகளிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர், இதனால் இது “எதிர்பார்ப்புகளின் பட்ஜெட்” என்று அழைக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வரி அடுக்குகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும், பொருளாதார வளர்ச்சியை வேகமாக தூண்டும் பல கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பை இப்போது மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. 65%க்கும் அதிகமான வரி செலுத்துவோர் புதிய வரி முறையை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, புதிய வரி விதிப்பில் நிலையான விலக்கு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிலையான விலக்கு ரூ.75,000 லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கவும், 20% வரி விகித வரம்பை ரூ.12-15 லட்சத்திலிருந்து ரூ.12-20 லட்சமாக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, ரூ.15-20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும்.

மேலும், இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விகிதம் அமல்படுத்தப்படலாம். இந்த மாற்றங்கள், பலரை பழைய வரி முறையிலிருந்து புதிய முறைக்கு மாற்றம் பெறுவார்கள்.

தமிழக அரசு தரும் ரூ 3 லட்சம்.. இவர்களெல்லாம் கட்டாயம் விண்ணபிக்கலாம்!!

குழந்தைகளுக்கு வாக்கிங் நிமோனியா பரவல்!!சுகாதாரத்துறை புதிய எச்சரிக்கை!!