விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!!

0
192
#image_title

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!

கட்டடம் கட்டப்படுவதில் விதிமீறல்களை தடுக்கவும், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி-யில்(DTCP) அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கும், மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் டி.டி.சி.பி-யில் உள்ளது. இந்த பணிகளுக்காக மாவட்டம் வாரியாக அலுவலகங்கள் உள்ளது என்றாலும் இந்த பணிகளில் நடக்கும் விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு என்பது இல்லை.

இதற்காக சென்னையில் உள்ள டி.டி.சி.பி தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு ஏற்படுத்தும் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது இதையடுத்து இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக டி.டி.சி.பி-யில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் “விதிமீறல் தொடர்பாக புகார்கள் அதிகரித்து வருகின்றது. இதனால் தொடக்கத்திலேயே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மனுக்களை கண்டுகொள்ளாமல் விட்டால் நீதமன்றங்களில் வழக்குகள் அதிகரிக்கின்றது. எனவே இதை கருத்தில் வைத்து டி.டி.சி.பி தலைமை அலுவலகத்தில் ஒரு இணை இயக்குநர் தலைமையில் ஒரு அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமலாக்கப் பிரிவில் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கள பணியாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைமை அலுவலகத்திற்கு வரும் புகர்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு இயக்குநருக்கு அறிக்கை அளிப்பார்.

அதன்படி விதிமீறல்கள் இருந்தால் அதன் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெரு நகரங்களில் மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக திடீர் ஆய்வு நடத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

Previous articleவானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!
Next articleசெந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!!