வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

0
183
#image_title

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!

வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானிலை டிவி மூலமாக உடனடியாக தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புயல், மழை போன்ற பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்தித்தாள், ஊடகம், டிவி, வானொலி போன்றவற்றின் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக மொபைல் போன் செயலிகள் மூலம் வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து வானிலை, டிவிக்களில் புயல், மழை தொடர்பான எச்சரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு வெளியிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் “வானிலை தொடர்பான தகவல்கள் தற்பொழுது குறுஞ்செய்தியாக மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பிரத்யேக வலைதளப் பக்கத்திலும் வானிலை தொடர்பான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.

சாசேட் என்ற மொபல் செயலி மூலமாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றது. இதன் அடுத்தகட்டமாக வானொலி, டிவிக்களில் வானிலை தொடர்பான எச்சரிக்கை செய்திகளை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எழுத்து வடிவத்தில் வழங்கப்படும் தகவல்கள் வானொலியில் பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் நடுவில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆபத்தான வானிலை தொடர்பான செய்திகளை மக்களுக்கு வழங்குவதற்கு உள்ளூர் மொழிகள் உள்பட இரண்டு மொழிகளில் இதற்கான தகவல்கள் வழங்கப்படும். இந்த திட்டம் நடப்பாண்டு இறுதிக்குள் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று கூறினர்.