விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!!
நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி லியோ திரைப்படத்தின் 20 நொடிகள் அடங்கிய சிறிய ஆச்சரியம் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், திரிஷா, மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜூன் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரிக்கின்றார். மலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையரங்கு உரிமம் ஓடிடி உரிமம் என்று 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
வருகிற ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளையொட்டி லியோ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடல் வெளியாகும் என்று லியோ படக்குழு அறிவித்துள்ளது.இந்த பாடலை நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து அனிருத் அவர்களும் பிக்பாஸ் அசல் கோலார் அவர்களும் பாடியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.
மேலும் நடிகர் விஜய் அவர்களுடன் நடிகை மடோனா செப்ஸ்டின் அவர்களும் இந்த முதல் சிங்கிள் பாடலில் நடனம் ஆடியிருப்பதாகவும், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அர்ஜூன் இருவரும் இந்த பாட்டில் ஒரு அங்கமாக இருப்பார்கள் என்றும் தகவல் பரவி வருகின்றது.இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் லியோ திரைப்படம் பற்றி பல தகவல்களை பேசியுள்ளார்.
பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் “மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நான் நடிகர் விஜய் அவர்களை அண்ணா என்றுதான் அழைக்கின்றேன்.நடிகர் விஜய் அண்ணா அவர்களின் பிறந்த நாளின் பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக 20 நொடிகள் அடங்கிய முக்கியமான ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கின்றது. நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.நிச்சியமாக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இந்த ஆச்சரியம் இருக்கப் போகின்றது” என்று கூறினார்.
மேலும இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் “படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எல்சியு பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 3 மாதங்கள் முழுமையாக உள்ளது” என்று அவர் கூறினார்.