கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!!

Photo of author

By Rupa

கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!!

கண்கள் உடலில் உள்ள முக்கிய உறுப்பு.கண்கள் இல்லை என்றால் வாழ்க்கை இருட்டாகி விடும்.பிறரின் உதவியின்றி வாழக்கையை நகர்த்த முடியாது.இதனால் தான் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தூங்கி விழித்ததும் கண்களில் இருந்து வெள்ளை பூளை வெளியேறுவதை பார்த்திருப்பீர்கள்.இவை கண்களில் ஒட்டிக்கிடக்கின்ற அழுக்குகளின் வெளிப்பாடு.சிலருக்கு கண் பொங்கும் பொழுது அதிக கண் பூளை வெளியேறும்.இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும்.

கண்களை சிமிட்டும் போது,துடைக்கும் பொழுது,தூங்கி எழும் போது,கண்களை கசக்கும் பொழுது இந்த கண் பீளை கண்களின் ஓரங்களில் ஒட்டிக் கொள்கிறது.பெரும்பாலும் கண்களில் இருந்து வெளியேறும் பூளை வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.ஒருவேளை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் பூளை வெளியேறினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

கண்களில் அதிகளவு பூளை வெளியேறக் காரணங்கள்:

*தூசு,அழுக்கு அதிகளவு கண்களில் படிந்தால் அவை அழுக்கு அதாவது பூளையாக வெளியேறும்.

*உடலில் அதிகளவு சூடு குறிப்பாக கண்களில் அதிக சூடு,எரிச்சல் இருந்தால் அவை பூளையை வெளியேற்றும்.

*ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்களுக்கு கண்களில் அதிகளவு பூளை வெளியேறும்.

கண்களில் இருந்து வெளியேறும் அதிகளவு பூளைக்கு எளிய தீர்வு:

தினமும் காலையில் எழுந்ததும் கண்களை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் கண்களை கழுவ வேண்டும்.

உடல் மற்றும் கண்களில் சூட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடலில் தொப்புள்,பாதாம்,காது,கண் பகுதி,தலை உள்ளிட்ட பகுதிகளில் நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

கண்களில் சுத்தமான விளக்கெண்ணெய் சில துளிகள் விடுவதால் கண்களில் இருக்கின்ற சூடு,தூசு,அழுக்கு அனைத்தும் நீங்கும்.இதனால் அதிகளவு பூளை வெளியேறுவது தடுக்கப்படும்.