cricket: 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிநிந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பிய பிசிசிஐ.
இந்தியா நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பின் பிசிசிஐ குழு நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து மீட்டிங் நடைபெற்றது இதில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பியது பிசிசிஐ குழு நிர்வாகம்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இதுவரை சொந்த மண்ணில் அடையாத தோல்வியை சந்தித்து. இந்திய அணியை சோகத்தில் ஆழ்த்தியது. ஆத ஆஸ்திரேலியா தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த மீட்டிங் 6 மணி நேரம் தொடர்ந்த நிலையில்.
ரோஹித் சர்மா 2025 டெஸ்ட் சம்பியான்ஷிப் க்கு பின் ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் போட்டியில் கேப்டனாக செயல்பட மாட்டார். அப்படியே ஓய்வு பெறவில்லை என்றாலும் அவர் கேப்டனாக தொடர மாட்டார் இந்நிலையில் அடுத்த கேப்டன் யார்?
இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் முதல் இரண்டு போட்டியில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அடுத்த கேப்டன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. அவருக்கு அடுத்ததாக துணை கேப்டனாக உள்ள பும்ரா டெஸ்ட் போட்டியின் கேப்டனாக தொடருவார??
சுப்மன் கில் அனைத்து வகையான போட்டிகளிலும் கேப்டன் ஆக்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் அவரின் அனுபவம் குறைவு என்பதால் அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் சில கிரிகெட் வட்டாரங்கள் தற்போது டெஸ்ட் அணியில் நன்றாக விளையாடி வருபவர் ரிஷப் பண்ட் அவர்தான் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க பட வேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. கம்பீர் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கட்ட கேப்டனை காண வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.