CRICKET: ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய தன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று காலை பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்றது. ஆனால் 150 ரன்களில் சுருண்டது.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இதுவரை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பதில் 11 முறை விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.
இதுவரை இவர் SENA நாடுகளில் மட்டும் 7 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 62 இன்னிங்ஸில் விளையாடி 7 முறை இந்த விக்கெட்டை எடுத்தார். தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ளார் பும்ரா.