cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை எதிர்கொள்வது மிகவும் எளிதான ஒன்று என்று ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள மூன்றாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை எதிர்கொள்வது குறித்து பேசியுள்ளார் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ்.
உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர் பும்பரா அவரை எதிர்கொள்ளும் போது நாம் இவரை எப்படியாவது தாக்குபிடித்து அடுத்த ஓவர் அட்டாக் செய்யலாம் என நினைக்க கூடாது. அவரின் பந்தினை தன்னம்பிக்கை உடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். நிதானமாக ஆட வேண்டிய பந்தினை நிதானமாக ஆட வேண்டும்.
பந்து நன்றாக வரும்போது அட்டாக் செய்து ஆட வேண்டும். அவரவர்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதற்கு ஏற்ப அவரின் பந்தை எதிர் கொள்ள வேண்டும் அப்போது தான் அவருக்கு எதிராக ரன் குவிக்க முடியும் அவரின் பந்தினை எதிர் கொள்ள ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.