காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்தியாவின் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.
இந்நிலையில் ஒருநாள் தரவரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது முதல் இடத்தை இழந்துள்ளார். நியுசிலாந்தின் ட்ரண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை:-
- போல்ட் – 727
- பும்ரா – 719
- முஜீப் – 701
- ரபடா – 674
- கம்மின்ஸ் – 673
- வோக்ஸ் – 659
- அமீர் – 656
- ஸ்டார்க் – 645
- ஹென்றி – 643
- ஃபெர்குசன் – 638

பேட்டிங்கைப் பொறுத்தவரை கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
- கோலி – 869
- ரோகித் – 855
- பாபர் – 829
- டெய்லர் – 828
- டூப்ளெசிஸ் – 803
- வார்னர் – 796
- டி காக் – 782
- கானே வில்லியம்சன் – 773
- ஜோ ரூட் – 770
- ஃபின்ச் – 769