இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

0
234

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

முதுகுவலி பிரச்சனை காரணமாக ஜாஸ்ப்ரித் பூம்ரா தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார்.

தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் பூம்ரா தொடர் ஓய்வளிக்கப்படாமல் முழுவதும் குணமாகாமல் மீண்டும் அணிக்கு ஆஸ்திரேலியா தொடரில் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசவில்லை. இப்போது மறுபடியும் காயம் என்று அவர் உட்காரவைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் உடல்தகுதியில் குழப்பமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் பூம்ரா இப்போது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்னும் 6 மாத காலத்துக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வு அவருக்கு தேவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இனிமேல் பூம்ரா அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Previous articleகூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!
Next articleசமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here