cricket: இந்திய அணியின் தற்போதைய கேப்டன் பும்ரா நன்றாக பந்து வீசி கொண்டு வந்த நிலையில் வெளியேறினார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இன்று பந்து வீசி கொண்டிருந்த பும்ரா திடீரென ஓய்வறைக்கு சென்று திரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் வென்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி 5 வது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்து நாள் முடிவுற்றது. இந்நிலையில் இன்று நன்றாக பந்து வீசி கொண்டிருந்த பும்ரா திடீரென ஓய்வறைக்கு சென்றார் ஆனால் மீண்டும் களம் திரும்பவில்லை.
அவருக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் வந்தார். அவர் ஸ்கேன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக பார்க்கபடுகிறது. இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் பும்ரா மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.