இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பதிவு செய்த பின்பு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் கேப்டன் பும்ரா.
இந்திய அணி நியூசிலாந்து உடனான படுதோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்தார். விராட் கோலி சதம் விளாசினார், கே எல் ராகுல் 77 ரன்கள் அடித்தார். விராட் கோலி ஒன்றரை ஆண்டுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கேப்டன் பும்ரா விராட் கோலி தனது ஃபார்மை நிருபித்துள்ளார். மேலும் இவருக்கு எங்களின் உதவி தேவையில்லை, அவரின் அனுபவம் தான் எங்களுக்கு தேவை அவர் ஃபார்மில் தான் இருக்கிறார்.அவருக்கு ஆஸ்திரேலியா மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.