இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு மிக பெரிய தூணாக இரு வீரர்கள் இருந்து வருகின்றனர். இந்திய அணிக்கு பும்ரா என்றால் ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட்.
டிராவிஸ் ஹெட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நபராக முதலிடத்தில் உள்ளார். மேலும் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக களமிறங்கி அபாரமாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பும்ராவை எதிர்கொள்ள புதிய யுக்தியை ஹெட் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றனர்.
மேலும் அதே போல் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருப்பவர் டிராவிஸ் ஹெட் இவர் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 409 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதலாவதாக உள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இருவரில் யாருக்கு வெற்றி என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இனி நடைபெற உள்ள இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.