இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இன்று கேப்டனாக இந்திய அணியை பும்ரா தலைமை தாங்கினார். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கினர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை அதனால் 72.2 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது மேலும் இந்திய அணி இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் களமிறங்கும் போது 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.
இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடிய பின் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜா மற்றும் கொன்ஸ்டாஸ் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்து 3 வது ஓவரை வீச வந்த பும்ராவை கொன்ஸ்டாஸ் வம்புக்கு இழுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த நொடியே வீசிய பந்தில் கவாஜா விக்கெட்டை வீழ்த்தினார். அந்த பந்துதான் இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்து அதில் விக்கெட் வீழ்த்தியது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர்.