இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தனது ஆரம்பம் தற்போது வரை இருந்த இன்னல்கள் குறித்து கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் எப்படி இந்த கிரிக்கெட் போட்டியில் வளர்ந்தேன் என்பது குறித்து கூறினார்.
நான் கிரிக்கெட் போட்டியை தாமதமாகவே விளையாட ஆரம்பித்தேன் தற்போது போல அல்ல அப்போது ஆறு வயது ஏழு வயதில் அல்ல, நான் 16,17 வயதில் தான் விளையாட தொடங்கினேன். அதை நான் ஒரு ப்ளஸ் ஆகா தான் பார்க்கிறேன். அதனால் தான் நான் தற்போது துவங்காமல் விளையாடி வருகிறேன் என்று கூறினார்.
மேலும் நான் பந்து வீச எனக்கு பயிற்சியாளர் என்று யாருமில்லை நான் முதலில் தொலைக்காட்சியை பார்த்து தான் விளையாட முயற்சி செய்தேன். அதில் இருந்து தான் நான் பல நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். என்னால் நீண்ட தூரம் ஓட முடியவில்லை அதுவும் ஒரு பிளஸ் ஆகா தான் பார்க்கிறேன். நீண்ட தூரம் இல்லாமல் அருகில் இருந்து ஓடி வரும்போது பந்தினை வேகமாக வீச முடியும்.
மேலும் நான் அணிக்குள் வரும்போது ஆறு மாதம் கூட அணியில் இவர் தாக்கு பிடிக்க மாட்டார் என சொன்னார்கள். மேலும் எனக்கு எவரும் பயிற்சி அளிக்க முன்வரவில்லை. என் பவுலிங் ஆக்ஷனை நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். நான் சிறப்பாக செயல்படுவேன் என்று அவர்கள் நினைக்கவில்லை. தற்போது வரை எனக்கு சாதகமாக நானே இருக்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.