சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்! மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Photo of author

By Parthipan K

சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்! மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Parthipan K

Updated on:

சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்!மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

அரியலூர் மாவட்டத்தில் இடுகாட்டிற்கு செல்லும் பாலம் இடிந்துள்ளதால் இடுகாட்டிற்கு செல்லாமல் சாலைகளிலேயே சடலங்களை எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் நங்கன் பாடி என்னும் இடத்தில் உள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் ஒன்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த பாலம் சேதமடைந்து உள்ளதால் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது. மேலும் இந்த பாலம் சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். மழையின் காரணத்தால் அந்த வழியில் செல்ல முடியாததால் சாலையிலேயே இறந்தவரின் உடலை தகனம் செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் மழைக்கு முன்னதாகவே பாலத்தினை சரி செய்து தர கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

பாலத்தினை மறுசீரமைத்து போதுமான வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.