உணவு உட்கொண்ட பிறகு ஏப்பம் விடுவது இயல்பாக அனைவருக்கும் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான்.ஆனால் புளித்த மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய ஏப்பம் வெளிவந்தால் அவை உடல் ஆரோக்கியம் மோசமாக உள்ளதை காட்டும் முக்கிய அறிகுறியாகும்.
வயிற்றில் அதிகப்படியான வாயுக்கள் தேங்கி இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் நிகழும்.சிலர் அவசர அவசரமாக உணவு உட்கொள்வார்கள்.இதனாலும் புளித்த ஏப்பம் ஏற்படுகிறது.புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அடிக்கடி புளித்த ஏப்ப பிரச்சனையை சந்திக்கின்றனர்.
உணவுப் பாதையில் உருவாகும் வாயுக் குமிழ்கள் ஏப்பமாகவும்,ஆசனவாய் வழியாக காற்றாகவும் வருகிறது.உடல் எடை அதிகமாக உள்ளவர்கள்,நெஞ்செரிச்சல்,செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு புளித்த ஏப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
துர்நாற்றத்துடன் வெளியேறும் புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
1)வெள்ளைப் பூண்டை நசுக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் புளித்த ஏப்பம் வருவது கட்டுப்படும்.
2)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து பருகினால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.
3)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகினால் துர்நாற்றத்துடன் கூடிய புலிதான் ஏப்பம் வருவது கட்டுப்படும்.
வயிறு உப்பசம்,வாயு மற்றும் துர்நாற்றத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.துரித உணவுகளை அதிகளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.புளித்த ஏப்பத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.புளித்த ஏப்பம் வராமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு துர்நாற்றத்துடன் கூடிய புளித்த ஏப்பம் அதிகளவு ஏற்படுகிறது என்றால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.