பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

0
222
Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!
Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது.

அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த லாரியானது பேருந்தின் மீது மோதியது . அந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகளில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleசற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!
Next articleஇப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..