பேருந்து கட்டணத்தை 6 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது!!

Photo of author

By Vinoth

புதுவை: பஸ் கட்டணம் உயர்த்தியது இதற்கான அறிவிப்பை கவர்னர் கைலாசநாதர் உத்தரவின் படி போக்குவரத்து கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஏசி வசதி இல்லாத நகர பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ஐந்திலிருந்து ஏழு ரூபாயாகவும் அதிகபட்ச கட்டடம் 13-இல் இருந்து 17 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி உள்ள நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் பத்திலிருந்து 13 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 26-இல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் மூன்று ரூபாயும் அதிகபட்சம் எட்டு ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏசி இல்லாத டீலக்ஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 12 ரூபாயாகவும் அதிகபட்ச 36-ந்து 47 ரூபாயாகவும் உள்ளது. ஏசி இல்லாத விரைவு பஸ்களுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கிலோமீட்டருக்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் வரை 20 ரூபாய்க்கு இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயா உயர்ந்துள்ளது.

ஏசி விரைவு பஸ்களுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு என்பது தற்போது இரண்டு ரூபாய் 69 காசு ஆக உயர்ந்துள்ளது. வால்வோ பஸ்களுக்கான கட்டணம் புதுச்சேரி நகரப் பகுதிக்குள் கிலோமீட்டர் ஒரு ரூபாய் 70 காசு என்பது இப்போது இரண்டு ரூபாய் 21 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முதல் 30 கிலோமீட்டர் 54 ஆக இருந்த கட்டணம் 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2018-க்கு பிறகு புதுச்சேரியில் இந்த ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.