பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

Photo of author

By Parthipan K

பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

Parthipan K

Updated on:

பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பிரோன்கால் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

லால்தாங் பகுதியில் இருந்து திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக 50-க்கும் மேற்பட்டோர் பிரோன்கால் க்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு பஸ் பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது.

சிம்ரி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்த ஊர்மக்கள், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 21 பேர் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.