ஈரோடு மாவட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! விபத்தில் சிக்கிய பயணிகள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! விபத்தில் சிக்கிய பயணிகள்!

Parthipan K

Bus overturned in Erode district! Passengers involved in an accident!

ஈரோடு மாவட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! விபத்தில் சிக்கிய பயணிகள்!

ஈரோடு மாவட்டம் நேற்று பழனியில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ்  ஓன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30 பயணிகள் பயணித்தனர். அந்த பேருந்தை  தினேஷ் குமார் என்பவர் இயக்கி வந்தார். அந்த பேருந்தானது காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அதே பகுதியில் இருசக்கர மோட்டார் சைக்கிள் ஓன்று  வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்தானது  அந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் தினேஷ் குமார் பேருந்தை  நிறுத்தம் முயன்றார்.  அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து வந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.  அப்போது அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும்  இது குறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் அரசலூர் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.