அரசு வேலைக்கு ஆசைப்படாதிங்க! மீன் சாப்பிடுங்க கண்ணுக்கு நல்லது ! அமைச்சரின் புதிய ஆலோசனை?

0
204

அரசு வேலைக்கு ஆசைப்படாதிங்க! மீன் சாப்பிடுங்க கண்ணுக்கு நல்லது ! அமைச்சரின் புதிய ஆலோசனை?

இன்றைய கால இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்பு தொழிலுக்கு சிறப்பான முறையில் அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது.

ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு செய்தால் பத்து மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம் என்றும், மீன் சாப்பிட்டால் கண் பார்வை கோளாறு, ஹார்ட் அட்டாக், கேன்சர் போன்ற நோய்கள் வராது என்றும் கூறினார்.

Previous articleபார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?
Next articleதமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்