சீக்கிரம் குடம் எடுத்துட்டு வாங்க? சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்!
இடப்பாடி அருகே ராசிபுரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதனிடையே நேற்று மாலை எடப்பாடி வழியாக செல்லும் மோரி வளவு என்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைந்தது. இதில் பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள கேட்டு கடையின் அருகே அதே பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து பல லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்ததும் குடம்குடமாக எடுத்து வந்து தண்ணீரை கொண்டு சென்றனர்.
தண்ணீர் இல்லாமல் பல பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் இதனை அறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் இக்குழாயில் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து வந்தனர். எதனால் உடைப்பு ஏற்பட்டிருக்கும் என்று தொடராய்வில் ஈடுபட்டு வந்தார்கள்.