அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
69
Extension of time to join government colleges! Important information released by the minister!
Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதனையடுத்து கல்லூரிகள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம் 17ஆம் தேதி உடன் முடிவடையும் என கூறினர். ஆனால் தற்போது வரை சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. அதனால் அம் மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர இயலாத சூழல் நிலவுகிறது. அதனால் அவர்களின் நலனை எண்ணி உயர் கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது,உயர்கல்வியில் சேர விண்ணப்ப தேதியை நீட்டித்துள்ளோம்.  சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க ஐந்து நாட்கள் வரை  கால அவகாசம் நீட்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்பொழுது வரை அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு 20 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். அதனால் அனைத்து கலை கல்லூரிகளிலும் மேலும் 10 சதவீதம் ஒதுக்கீடு தருவதாக கூறியுள்ளார்.