தூ-ன்னு துப்பினாக்கூட ரூ.500 பைன் வாங்கிடுவாங்க! பைன் போட்டு மாவட்டத்தையே சுத்தம் செய்யும் அரசாங்கம்!
கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது.
பின்பு ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் விதிமுறைகளை கடைபற்றினர்.நாளடைவில் கொரோனா ஒன்று இருப்பதை மக்கள் மறந்து சகஜமாக நடமாட ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் கொரோனாவானது அதிக அளவு பரவ ஆரம்பித்துவிட்டது.பெருமளவு கொரோனா தொற்றானது மகாராஷ்டிரா,தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
மீண்டும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவிவருவதால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அதிக தொற்று உள்ள மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தனர்.அதன்பின் மக்கள் இந்த வழிமுறை கட்டுப்பாடுகளை எல்லாம் சில காலம் தான் பின்பற்றுவார்கள்,அவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காக சென்னையில் மட்டும் புது புது அபராதங்களை போட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த அபராதங்களின் இலக்கு ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இனி சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.அதே போல இனி தனிமனித இடைவெளி கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.அதனையடுத்து மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி வணிகவளாகங்கள்,ஜிம்கள்,மால்கள் உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.இரண்டு முறைக்கு மேல் கொரோனா விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.