2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!

Photo of author

By Savitha

2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்ன (Pakka Sarna) கிராமத்தில், சேது பந்தன் திட்டத்தின் கீழ் 2,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் ஏழு ரயில்வே மேம்பாலம் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிதின் கட்கரி,  ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்படும் சாலை தொடர்பாக உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், 2024 ஆம் ஆண்டுக்குள் ராஜஸ்தானில் உள்ள சாலைகள் அமெரிக்காவில் இருப்பது போல மகிழ்ச்சியான மற்றும் வளமான மாநிலமாக மாறும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மற்றொரு தலைவர், நாட்டின் ஒவ்வொரு கிராமங்களையும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி , அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடையில் வார்த்தைகளை மேற்கோள் காட்டி , அதாவது ” அமெரிக்கா வளமான நாடாக இருப்பதால் சாலைகள் நன்றாக அல்ல , அமெரிக்காவின் நல்ல சாலைகள் காரணமாக , வளமான நாடாக உள்ளது” என்றார்.

அதேபோல் 2024 ஆம் ஆண்டுக்குள் ராஜஸ்தானி சாலைகளும் அமெரிக்காவின் சாலைகளுக்கு இணையாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தார் நிதின் கட்கரி.மேலும் இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் மகிழ்ச்சியான மற்றும் வளமான மாநிலமாக மாறும் என்றும் தெரிவித்தார்.

வறுமை ,  பட்டினி , வேலையில்லா திண்டாட்டம் நீங்க வேண்டும் , விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் , இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் ,நாட்டின் இறக்குமதி `யை நிறுத்தி – ஏற்றுமதியை பெருக்க வேண்டும் ,உணவு வழங்குபவர் களாகவும் எரிசக்தி வழங்குபவர் களாகவும் மாறி விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.