தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி!!

0
270
#image_title

தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அவர்களை இந்தியாவிற்கு தீபாவளியை கொண்டாட வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பான் சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மத்தியில் பேசினார்.

பின்னர் சிட்னியில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவர்களும் இரண்டு நாட்டு தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு இரண்டு பிரதமர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவு டி20 கிரிக்கெட் மாதிரி உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை காண பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அந்த நேரத்தில் வரும் தீபாவளியை இந்தியாவில் கொண்டாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.