வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு
திருவனந்தபுரம் :
ராகுல் காந்தி எம்பி அவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா வில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்களை அவதூறாக பேசியதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. தற்போது எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டதால் இனி அவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏம்.பி பதவி நீக்கப்பட்டதால் அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்படும் தேதியன்று வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்திரபிரதேசம் அமேதி தொகுதி ராஜீவ் காந்தி ராகுல் காந்தி ,சோனியா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரின் வெற்றி தொகுதியாக இருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தி அவர்கள் அமேதி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் வயநாடு தொகுதியில் எதிர்பார்க்க முடியாத 64% வெற்றியை குவித்தார். வரும் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி நிற்கக்கூடும் எனவும் அதே சமயத்தில் இவரின் வெற்றி இன்னொரு இந்திரா காந்தியை உருவாக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.