சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

0
257
#image_title

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் தற்போது மிகவும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இழந்தார். இதனைத்தொடர்ந்து அந்த இருக்கையில் அவர் உட்கார அனுமதிக்க கூடாது என அதிமுகவினர் சட்டமன்றத்தில் தொடர் முழக்கம் எழுப்பி வந்தனர்.

எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக, அதிமுக சட்டமன்ற கொறடா வேலுமணி இன்று சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்த அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்த பட்டு விட்டதாகவும் எனவே, இருக்கை குறித்து விவகாரம் தொடர்பாக விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்குமாறு சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறுவதால் அதிமுகவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி தரப்போ எதற்கும் அசருவது போல தெரியவில்லை. எடப்பாடிக்கு எதிராக பன்னீர்செல்வம் பத்து முறை வழக்கு தொடுத்து, தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.