இரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!

0
426
இரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!
anjutha Dr

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா. இவர் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவரவாக பணியாற்றி வந்தார்

இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு, கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஆனால் மருத்துவர் அஞ்சுதாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர் அஞ்சுதாவின் மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மருத்துவர் அஞ்சுதாவின் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்”

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான… pic.twitter.com/JwjBo9AXaA
— Dr C Vijayabaskar – Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) May 2, 2024

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம்.

மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.