அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் பிடிஆர் வெளிநடப்பு! நிதியமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் அவலம்!!  

Photo of author

By Parthipan K

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் பிடிஆர் வெளிநடப்பு! நிதியமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் அவலம்!!  

Parthipan K

PDR walked out halfway through Chief Minister Stalin's cabinet meeting

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் பிடிஆர் வெளிநடப்பு! நிதியமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் அவலம்!!

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர், இந்த அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாதியில் வெளியேறி இருக்கிறார்.அனைத்து மூத்த அமைச்சர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் முதலமைச்சர் ஸ்டாலின்னின் மருமகனும் 30 ஆயிரம் கோடி ரூபாய்யை இருவரும் பிரித்துக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பழனிவேல் தியாகராஜன் பேசியது குறிபிடத்தக்கது.இந்த நிலையில் தான் அமைச்சரவை கூட்டத்திலிருந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாதியில் வெளியேறி இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது.