அமைச்சரவையில் மாற்றமா? அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!!
தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் சூழலில் புதன்கிழமை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வந்துள்ளது. மேலும் சில அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது, இதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது, திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி பட்டியலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளது, மேலும் அவர் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாமல் இருபதாகக் கூறப்படுகிறது, மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியானது பெரும் சர்ச்சையில் உள்ளது.பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் பொதுவெளியில் சில மூத்த அமைச்சர்கள் மக்களிடத்தில் முகம் சுளிக்கும் படி பேசுவதும், நடந்துக்கொள்வது தொடர்கதை ஆகியுள்ளது, ஆகையால் சில அமைச்சர்களை நீக்கி விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.