இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி ஒன்றை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்ற விவசாயி வசித்து வருகின்றார். விவசாயி ரவீந்தர் அவருடைய பண்ணையில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த இரண்டு கறவை மாடுகளில் ஒரு கறவை மாடு ஆண் கன்று ஈன்றது.
இந்த ஆண் கன்று அந்த கிராமத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆண் கன்று சாதாரண கன்றுக் குட்டி போல இல்லாமல் இரண்டு தலையுடன் பிறந்துள்ளது.
இரண்டு தலையுடன் பிறந்த இந்த ஆண் கற்றுக் குட்டி இரண்டு மூக்கு, இரண்டு வாய், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இரண்டு தலையுடன் கன்றுக் குட்டி பிறந்துள்ளது என்ற தகவல் அருகில் உள்ள கிராமம் முழுவதும் தீயாக பரவியது.
இதையடுத்து அந்த கிராமத்திற்கு இரண்டு தலையுடன் பிறந்த கன்றுத்குட்டியை பார்க்க மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
கடவுளின் ஆசிர்வாதத்தினால் கரிமத் பிறந்துள்ளதாக அந்த கிராம மக்கள் கருதுகின்றனர். மேலும் விவசாயி ரவீந்தர் அவர்கள் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியையும் பசுமாட்டையும் கண்காணித்து வருகிறார்.