வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!!

0
51
#image_title

வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!!

உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்23) அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று(செப்டம்பர்23) உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு சர்வதேச மைதானத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் சச்சின் தெண்டுல்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், துறை அதிகாரிகள், பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 450 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளும் அடங்கிய வகையில் கட்டப்படவுள்ளது. சுமார் 30000 பார்வையாளர்கள் இந்த கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் கட்டப்படவுள்ளது.

இந்த சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவுள்ளது. அதாவது திரிசூலம் வடிவில் விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவில் மையப்பகுதி, பிறைநிலா வடிவில் மேற்கூறை ஆகிய வடிவத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்தை எல்&டி நிறுவனம் கட்டவுள்ளது. மேலும் இந்த மைதானம் சரியாக இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.