இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  

Photo of author

By CineDesk

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  

CineDesk

Call me so you can make and eat biryani in 6 cylinders that come for free !! But I will eat just veg traveler !!

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!

வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். சில கட்சிகள் அவரவர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி  அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நடிகையும், பஜாகவை சேர்ந்தவருமான நமீதா மதுரை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து சீமான் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய போது டாக்டர் சரவணனை வெற்றிபெற வைத்தல் மோடிக்கு இணையான உதவிகளை செய்வார் ஒன்றும் இல்லாத கட்சியில் நிறைய செய்த சரவணன் இப்பொது அதிகமாவே செய்வார். தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய, மாநில அரசின் நல திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும். வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம், என்னையும் சாப்பிட கூப்பிடுங்க நான் வருகிறேன் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன் மற்றும்  இலவச அரசு கேபிள் இணைப்பு கொடுப்போம் உங்களுக்கு பிடித்த சீரியலை சந்தோசமாக நீங்க பார்த்துகிட்டே இருங்கலாம்.

இதேபோல் இலவச வாசிங்மெஷினும் இடம் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர உள்ளனர், மாதம் ரூபாய் 1,500, வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலை வாய்ப்பு தரபோகிறோம் எனவே தமாரைக்கு ஓட்டு போடுங்க. மதுரையிலும் தாமரை மலரட்டும் என்று நக்கல் நிறைந்த பரப்புரையில் ஆதிமுக செய்யவிருக்கும் நலத்திட்டங்களை நமீதா கூறினார்.