வீட்டிற்கு சென்றாலும் மாணவனை விரட்டிச் சென்ற காலன் ! மறந்து விட்டதை எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !
பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது,
சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தினை ராஜேந்திரன் என்ற டிரைவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
அந்தப் பேருந்து கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே வரும் பொழுது அங்கு வந்த பள்ளி சீருடை அணிந்த மாணவன் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இறந்து போன பள்ளி மாணவன் கன்னங்குறிச்சியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான நடராஜன் என்பவரது மகன் கவேஸ் வயது 12, என்பதும் அவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வழக்கம்போல் சென்ற மாணவன் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளான். வீட்டிற்கு வந்ததும் தனது ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து வகுப்பில் வைத்து விட்டு வந்தது மாணவனுக்கு நினைவிற்கு வந்தது.
எனவே அது தேவை என்பதால் மீண்டும் பள்ளிக்குச் சென்று அதை எடுத்துக் கொண்டு வருவதாக தனது தாய் கௌரியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். சென்ற மாணவர் தான் பஸ் மோதி பரிதாபமாக விபத்தில் பலியாகி உள்ளார். பாக்ஸை எடுத்துச் சென்ற மாணவன் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.