மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

Photo of author

By Parthipan K

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர் உமாபாரதி. பாஜகவின் முக்கிய தலைகளில் இவரும் ஒருவர்.

இவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர், ஜனவரி 15-ந் தேதிக்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய வேண்டும் என்று கடந்தாண்டு கூறியிருந்தார். இல்லையென்றால் தடியால் அடிப்பேன் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச அரசு மதுவுக்கு தடை விதிக்காமல் அந்த மாநிலத்தில் மதுவுக்கு புதிய கலால் வரியை விதித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு மதுபானங்களுக்கான கலால் வரியை அம்மாநில அரசு குறைத்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை ஒன்றாக விற்பனை செய்யவும் கடைகளுக்கு அனுமதி வழங்கியது.

அரசின் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்த உமாபாரதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களை திரட்டி போராட்டம் செய்யப்படும் என அறிவித்தார். இதையடுத்து போபாலில் தனது ஆதரவாளர்களுடன் கூடிய உமாபாரதி அங்குள்ள மதுக்கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். உமாபாரதியின் இந்த திடீர் தாக்குதலால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.