மூட்டு வலியை மாயமாக்கும் கற்பூர தைலம்!! அதிசயம் 2 நிமிடத்தில் வலி மறையும்!!

Photo of author

By Divya

மூட்டு வலியை மாயமாக்கும் கற்பூர தைலம்!! அதிசயம் 2 நிமிடத்தில் வலி மறையும்!!

Divya

பெரியவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.எலும்பு வலிமையின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்,எதிர்பாராத விதமாக மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் மூட்டு வலி,மூட்டு பகுதியில் வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்பூர தைலத்தை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
2)விளக்கெண்ணெய் – 50 மில்லி
3)நல்லெண்ணெய் – 50 மில்லி
4)கற்பூரம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 50 மில்லி தேங்காய் எண்ணெய்,50 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த எண்ணெய் கலவை சூடானதும் அதில் இரண்டு கற்பூரம் அதாவது சூடத்தை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் கெட்டியாகி தைலம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவைத்து மூட்டு பகுதியில் தேய்த்தால் வலி குறையும்.இந்த கபூரை தைலம் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் தன்மை கொண்டது.

மூட்டு வலி குறைய தினமும் ஒரு முட்டை வேகவைத்து உட்கொள்ளலாம்.அதேபோல் கருப்பு உளுந்து பருப்பில் கஞ்சி,கூழ்,களி செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்புகள் வலிமையாகும்.

அதேபோல் பிரண்டையை நல்லெண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து மூட்டு பகுதியில் தடவினால் மூட்டு வலி ஏற்படுவது குறையும்.விளக்கெண்ணெய்யில் பூண்டு,மிளகு,கற்பூரம் போட்டு காய்ச்சி வடித்து மூட்டின் மீது தடவினால் வலி மாயமாகும்.