ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் காட்டி பெற நினைப்பது சட்டபூர்வமாக செல்லுபடி ஆகாது என கூறி இருக்கக்கூடிய நீதிமன்றம், அதற்கான ஆதாரங்கள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் கட்டாயமாக உரிமை கோர முடியும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால் மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ மருமகன் நிதி உதவி செய்திருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் சரியானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, மாமனார் ஒரு மருமகனுக்கு தன்னுடைய சொத்தை அவரின் சொந்த நினைவின் பேரிலோ அல்லது பரிசு பத்திரமாகவோ வழங்கும் பட்சத்தில் மருமகன் முழு உரிமை அந்த சொத்தில் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் மாமனாரிடம் இருந்து பெறப்படக்கூடிய உயிலோ அல்லது பரிசு பத்திரமோ அவருக்கு வற்புறுத்தலை கொடுத்தோ அல்லது மன அழுத்தத்தை கொடுத்தோ வரப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உரிமை அறியும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்களுடைய சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற முடியும் என்றும் இந்தியா சட்டம் தெரிவிக்கிறது.