குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை கொடுக்கலாமா கொடுத்தால் என்ன ஆகும்!!

 

இன்றுள்ள குழந்தைகள் நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.பாப்கார்ன்,உருளைக்கிழங்கு சிப்ஸ்,இனிப்பு பண்டங்களை அதிகளவு உட்கொள்வதால் இது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடுகிறது.உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது சாதாரணமாக இருந்தாலும் இது நாளடைவில் ஆபத்தான பழக்கமான மாறிவிடுகிறது.

 

குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1500 மில்லி கிராம் உப்பை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இன்றுள்ள குழந்தைகள் குறிப்பிட்ட அளவை விட இரு மடங்கு உப்பை உட்கொள்கின்றனர்.உப்பிட்ட பண்டங்களை தொடர்ந்து சாப்பிட்டால் பித்தம்,வாதம்,சிறுநீர்கக் கோளாறு,இதயக் கோளாறு,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

இளம் பருவத்தில் அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகள் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து நீரிழிவு நோய்,இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நல்ல பழக்கங்களை கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை.சிறு வயதில் குழந்தைகளுக்கு உணவுமுறை குறித்த விழிப்புணர்வு இருந்தால் தான் பின்னாளில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது குறையும்.

குறிப்பாக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு இது தவறான உணவுமுறை பழக்கமாக மாறுகிறது.