குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

0
10

பெரியவர்கள்,குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இது கோடை காலத்தில் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.மல்கோவா,அல்போன்சா,பங்கனப்பள்ளி என்று பல ரக மாம்பழங்கள் இருக்கின்றது.

மாம்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்:

**இரும்புச்சத்து
**நார்ச்சத்து
**காரோட்டினாய்டு
**வைட்டமின் ஏ
**வைட்டமின் பி
**வைட்டமின் சி
**பொட்டாசியம்
**புரதம்
**சர்க்கரை சத்து

குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா?

சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில குழந்தைகளுக்கு இருக்கின்றது.நன்கு பழுத்த மாம்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

மாம்பழம் சாப்பிடும் குழந்தைகளுக்கு சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.அதேபோல் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த மாம்பழம் சாப்பிடலாம்.

மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

மாம்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.இரத்த சோகை வராமல் இருக்க மாம்பழம் சாப்பிடலாம்.ஆறு மாதமான குழந்தைகளுக்கு மாம்பழம் சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பழுக்காத மாம்பழம் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.மாம்பழத் தோல் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை பாதிக்கச் செய்துவிடும்.

சில குழந்தைகளுக்கு மாம்பழம் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தும்.ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Previous articleதிமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்
Next articleமீன் உடம்பை விட கண் மற்றும் தலை தான் பெஸ்ட்!! வாழ்நாள் முழுவதும்”Heart Attack”வராது!!