பழைய சாதத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

Photo of author

By Divya

பழைய சாதத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் உணவுப் பழக்க வழக்கங்களில் பழைய சாதம் முக்கிய பங்கு வகிக்கிறது.சிறந்த நீராகாரமாக திகழும் பழைய சோறு நம் பாரம்பரிய உணவாக இருக்கிறது.

இந்த உலகில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவாக பழைய சாதம் திகழ்கிறது.வடித்த சாதத்தை ஒப்பிடுகையில் மீந்து போன சாதத்தில் தயாரிக்கப்படும் பழைய சோறு நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.

பழைய சாதத்தில் இரும்புச்சத்து,நல்ல பாக்டீரியாக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த நீராகாரத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

உடல் சூடு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த நீராகாரம் சிறந்த தீர்வாக இருக்கிறது.குடல் புண்,அல்சர் புண்,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தாக திகழ்கிறது.

பழைய சோற்றில் நிறைந்துள்ள சத்துக்கள்:

1)புரதம்
2)இரும்பு
3)பொட்டாசியம்
4)நல்ல பாக்டீரியா

தினமும் பழைய சோறு பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பழைய சாதம் கொடுக்கிறது.இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த பழைய சாதத்தை நீரிழிவு நோய் இருப்பவர்கள் பயன்படுத்தலாமா என்ற கேள்வி இன்றுவரை வட்டமடித்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் பழைய சாதம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.பழைய சாதத்தை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பழைய சோறு இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் அதேவேளையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அல்சர் மட்டுமின்றி புற்றுநோய் செல்களின் வருகையையும் இந்த பழைய சாதம் தடுக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் தினமும் காலையில் ஒரு கிளாஸ் பழைய சாதம் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.