தேங்காய் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும்.தேங்காயில் வைட்டமின்கள்,தாதுக்கள் அதிகளவு நிறைந்திருப்பதால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சிலருக்கு தேங்காய் பால் என்றால் அதீத இஷ்டம்.தேங்காய் துண்டுகளை நீர்விட்டு அரைத்து இந்த தேங்காய் பால் எடுக்கப்படுகிறது.இந்த தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களை கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பொட்டாசியம்,கால்சியம்,இரும்பு,வைட்டமின் சி,ஈ,மெக்னீசியம் மற்றும் நம்மை தரும் கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த தேங்காய் பால் எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
தேங்காய் பாலில் எளிதில் செரிமானமாகக் கூடிய கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.எனவே தினசரி தேங்காய் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் அதிகளவு கிடைக்கும்.
தேங்காய் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1)தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள நல்ல கொழுப்பு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
2)தேங்காய் பால் குடிப்பதால் எந்த ஒரு அலர்ஜி பாதிப்பும் ஏற்படாது.தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
3)தேங்காய் பாலில் உள்ள கால்சியம்,மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.எலும்பு தேய்மானம் ஆவதை தடுத்து அதன் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
4)தேங்காய் பால் குடிப்பதால் சரும பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.சரும வறட்சி நீங்கி என்றும் இளமையாக இருக்க தேங்காய் பால் அருந்தலாம்.