கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்தை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

Photo of author

By Divya

கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்தை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

துளசி உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய மூலிகை.பெருமாள் கோயிலில் இந்த துளசியுடன் மேலும் சில பொருட்கள் கலந்து தீர்த்தமாக தரப்படுவது வழக்கம்.இந்த தீர்த்தத்தை வாங்கி குடித்திருப்பீர்கள்.துளசி,பச்சை கற்பூரம்,தேங்காய் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த தீர்த்தம் நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்று.

துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறை:

1)துளசி
2)ஏலக்காய்
3)மஞ்சள்
4)பச்சை கற்பூரம்
5)இலவங்கம்
6)தேங்காய் தண்ணீர்

முதலில் 10 அல்லது 15 துளசி இலைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு ஏலக்காய்,இரண்டு இலவங்கம்,ஒரு துண்டு பச்சை கற்பூரம் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை தேங்காய் தண்ணீரில் சேர்க்கவும்.

பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள துளசி இலைகளை தேங்காய் தண்ணீரில் போட்டுக் கலந்தால் பெருமாள் கோயில் தீர்த்தம் தயார்.கோயிலுக்கு சென்றால் இந்த தீர்த்தத்தை மறவாமல் வாங்கி குடியுங்கள்.வாரம் ஒருமுறை இந்த தீர்த்தத்தை செய்து குடித்து வரலாம்.

துளசியில் இரும்பு,வைட்டமின் ஏ,டி,நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.தீர்த்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற இந்த தீர்த்தத்தை குடிக்கலாம்.

சளி,சுவாசம் சார்ந்த பிரச்சனை முழுமையாக நீங்கும்.

செரிமான சக்தி அதிகரிக்க உதவுகிறது.

உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கல்லீரலில் இருக்கின்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.