தினமும் ஒரு கைப்பிடி கருப்பு கொண்டை கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Rupa

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்று கருப்பு கொண்டைக்கடலை.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,புரோட்டீன் உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.வெள்ளைக் கொண்டை கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கருப்பு கொண்டை கடலை குழம்பு,கிரேவி,சுண்டல் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்படுகிறது.

இந்த கொண்டை கடலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது.கூந்தல் ஆரோக்கியமாக இருக்க,அடர்த்தியான கூந்தலை பெற தினமும் கொண்டைக்கடலையை சாப்பிட வேண்டும்.

ஊறவைத்த கருப்பு கொண்டை கடலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் தினமும் கருப்பு கொண்டை கடலை சாப்பிடலாம்.

ஊறவைத்த கொண்டை கடலையில் அதிகளவு புரோட்டீன் நிறைந்திருக்கிறது.இது உடலை வலுவாக்க உதவுகிறது.இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இந்த கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமானசக்தி அதிகரிக்கும்.

கருப்பு கொண்டை கடலையில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டுமின்றி இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் கொண்டை கடலை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

இதில் இருக்கின்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலை முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உங்கள் வலிமையாக இருக்க கருப்பு கொண்டை கடலையை தினமும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.