கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சிலவகை உணவுகள் கருச்சிதைவிற்கு வழிவகுத்துவிடும்.கர்ப்ப காலங்களில் பெண்கள் தங்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பப்பாளி பழம்,எள் உணவுகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.பப்பாளி,அன்னாசிப்பழம் உடல் சூட்டை அதிகரித்து கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.ஆனால் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.
அதேபோல் வேக வைக்காத இறைச்சி உணவுகள்,சமைக்கப்படாத ஆட்டு மூளை,காய்ச்சாத பால் போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பாதரச மீன்களை கர்ப்பிணிகள் தவிர்த்துவிடுவது நல்லது.
மேலும் காபி,டீ போன்றவற்றை அதிகளவு பருகினால் கருச்சிதைவு பாதிப்பு ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு பழுத்த பப்பாளி பழம் சிறு துண்டளவு சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் பழுக்காத பப்பாளி,அன்னாசி போன்றவற்றை சாப்பிட்டால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:-
1)ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
2)மாதுளை,ஆப்பிள் போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும்.தேங்காய் பால்,பசும் பால் போன்றவற்றை செய்து பருகலாம்.
3)சூடான உணவுகள்,டீ காபி போன்ற ஆரோக்கியம் இல்லாத பானங்களை தவிர்க்க வேண்டும்.
4)கர்ப்பிணி பெண்கள் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
5)போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.இரும்புச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை சாப்பிட வேண்டும்.